பழைய கார் வாங்கப்போறீங்களா? அப்போ இதை முழுசா படிங்க.... அதிகமான விலைக்கு புது கார் வாங்குறதுக்கு பதிலா சில பல லட்சங்கள் குறைவா பழைய கார்களை வாங்குறது நல்ல விசயம் தான்ங்க. அதையும் கார் லோன் மூலமா வாங்கனும்ன்னா இன்னும் புத்திசாலித்தனமான முடிவுதாங்க. அப்படி வாங்குறப்போ அதுல என்னென்ன விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் அப்படினு தான் நாம் பார்க்கப் போறோம். இந்த கட்டுரைல நான் சொல்லப் போவது கார் பத்தின டெக்னிக்கல் சமாச்சாரங்கள் இல்லை. இந்த வரியை இன்னொரு தடவை நல்லா படிச்சுக்கோங்க. யூஸ்டு கார் லோன் வாங்கனும்னா, நாம வாங்கபோற கார்க்கு என்னென்ன அடிப்படையான விசயங்களை கவனிக்கனும்னு பாக்கலாம். கார் மாடல் (வருடம்) காரோட மாடல் எட்டு வருசத்துக்குள்ள இருக்கனும், ஏன்னா அதிகபட்சம் காரோட பத்தாவது வருசத்துக்குள்ள கட்டி முடிக்குற மாதிரிதான் கடனுக்கான திருப்பிச்செலுத்தும் தவணைக் காலங்கள் வழங்கப்படுது. அதாவது, அதிகபட்சம் 2 வருடங்கள் தான் தவணைக் காலம் 8வருட வாகனத்துக்கு. மத்த வாகனங்களுக்கு அதிகபட்சம் 5 வருடங்கள் கிடைக்கும் கார் ஓனர்ஷிப் நீங்க வாங்கப்போற கார்க்கு அதிகபட்சமாக நீங்க 3 வது ஓனர்னா மட்டும...