பழைய கார் வாங்கப்போறீங்களா?
அப்போ இதை முழுசா படிங்க....
அதிகமான விலைக்கு புது கார் வாங்குறதுக்கு பதிலா சில பல லட்சங்கள் குறைவா பழைய கார்களை வாங்குறது நல்ல விசயம் தான்ங்க. அதையும் கார் லோன் மூலமா வாங்கனும்ன்னா இன்னும் புத்திசாலித்தனமான முடிவுதாங்க. அப்படி வாங்குறப்போ அதுல என்னென்ன விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் அப்படினு தான் நாம் பார்க்கப் போறோம்.
இந்த கட்டுரைல நான் சொல்லப் போவது கார் பத்தின டெக்னிக்கல் சமாச்சாரங்கள் இல்லை. இந்த வரியை இன்னொரு தடவை நல்லா படிச்சுக்கோங்க.
யூஸ்டு கார் லோன் வாங்கனும்னா, நாம வாங்கபோற கார்க்கு என்னென்ன அடிப்படையான விசயங்களை கவனிக்கனும்னு பாக்கலாம்.
கார் மாடல் (வருடம்)
காரோட மாடல் எட்டு வருசத்துக்குள்ள இருக்கனும்,
ஏன்னா அதிகபட்சம் காரோட பத்தாவது வருசத்துக்குள்ள கட்டி முடிக்குற மாதிரிதான் கடனுக்கான திருப்பிச்செலுத்தும் தவணைக் காலங்கள் வழங்கப்படுது. அதாவது, அதிகபட்சம் 2 வருடங்கள் தான் தவணைக் காலம் 8வருட வாகனத்துக்கு. மத்த வாகனங்களுக்கு அதிகபட்சம் 5 வருடங்கள் கிடைக்கும்
கார் ஓனர்ஷிப்
நீங்க வாங்கப்போற கார்க்கு அதிகபட்சமாக நீங்க 3 வது ஓனர்னா மட்டும் வாங்குங்க. ஏன்னா 4 வது ஓனரா நீங்க வாங்குனா கார்லோன் கிடைப்பதில்லை.
கார் மாடல் & கம்பெனி
நீங்க வாங்கப்போற கார் மாடல் இன்னும் புது கார் விற்பனைல இருக்கான்னு பாத்துக்கோங்க.
அதே மாதிரி கார் கம்பெனியும் மார்கெட்ல இருக்கனும். (உதாரணமாக Chevrolet கம்பெனி உற்பத்தி & விற்பனைல இல்லை. அந்த கம்பெனி கார்க்கு லோன் கிடைக்காது)
டி -போர்டு சரண்டர்
சில கார்கள் புதிதாக வாங்கும்போது டி-போர்டு காராக வாங்கியிருப்பார்கள்.
அதன் பிறகு டி-சரண்டர் செய்து ஓவ்ன் போர்டு காராக மாற்றியிருப்பார்கள் அந்த கார்களுக்கும் வங்கிகள் நிதிநிறுவனங்கள் கடனுதவி அளிப்பதில்லை
மேற் சொன்ன விசயங்கள் அனைத்தும் கடனுதவியோடு கார் வாங்க நினைப்பவர்களுக்கு மிக முக்கியமான விசயங்கள்...
முழு பணமும் கட்டி வாங்குபவர்கள் காரின் தன்மையை பார்த்தால் மட்டும் போதுமானது.
ஆனால் ஒரு முக்கியமான விசயத்தை நினைவில் கொள்ளுங்கள், கார் என்பது மதிப்பில் தேய்மானம் அடையும் சொத்து எனவே கார் வாங்குவதில் முழு தொகையை முடக்குவதற்கு பதிலாக வங்கிகளில் கடன் பெற்று கையிருப்பு தொகையை முதலீடாக மாற்றுவது புத்திசாலித்தனம்.
கார் லோன் குறித்த சந்தேகங்களுக்கு,
தொடர்பு கொள்ளலாம்
9843177227
Useful msg
ReplyDeleteInformative one
ReplyDelete